-
திடீரென பொங்கி நுரை தள்ளிய யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர் வீடு சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனொரு கட்டமாக குறித்த நபரின்…
-
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திமணமாகி ஒரு வருடத்தில் துயரம்

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும்…
-
யாழ்ப்பாணம் பண்ணை கடலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய இருவர். உள்ளூர்வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நீரில் மூழ்கியவர்களை மீட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார்…
-
இலங்கையில் பயங்கரம்; 61 வயது கணவனை அடித்துகொன்ற மனைவி

மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் மஹாகிரிந்தேகமவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஆவார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த 5 வீடுகள்

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.
-
யாழ் தையிட்டியில் பதற்றம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியுள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் பௌர்ணமி தினமான நேற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்பட்டபோதே ஆர்ப்பாட்டக்காரர்களின்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தை பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார். இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார். இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக…
-
யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய பதின்ம வயது மகள்

யாழில் வர்த்தகரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி 17 வயதான மாணவி, நண்பிக்கு பணப்பரிமாற்றம் செய்த சம்பவத்தால் தந்தை ஆடிப்போயுள்ளார் . அண்மையில் யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் தனக்கு தெரியாது மாற்றப்பட்டுள்ளதாக வங்கிக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம், பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும்,…
-
நாவற்காடு பகுதியில் ஆண் , பெண் கொலை

நுரைச்சோலை – நாவற்காடு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆணொருவரும் இரண்டு பெண்களும், ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ஆண் ஒருவரும் 35 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நாவற்காடு பகுதியை சேர்ந்த…
